கனடா செய்திகள்
நேட்டோவில் இணையும் இரு முக்கிய நாடுகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கனடா பிரதமர்!
04/22/2022நேட்டோவில் இணையும் ஸ்வீடன், பின்லாந்துக்கு ஆதரவளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கூறியுள்ளார்.
நேட்டோ இராணுவக் கூட்டணியில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து கூறும்போது, நேட்டோவில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்தைச் சுற்றி உரையாடல்கள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், கனடா நிச்சயமாக இரு நாடுகளுக்கும் ஆதரவினை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.