கனடா செய்திகள்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்வெளி ராக்கெட்டை 2ம் முறை ஏவிய தென்கொரியா
06/22/2022சியோல்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்வெளி ராக்கெட்டை ஏவும் முதல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது முறையாக நேற்று தென்கொரியா விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியது. தென்கொரியாவில் முதல் முதலாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் நூரி என்ற விண்வெளி ராக்கெட் உருவாக்கப்பட்டது. இந்த ராக்கெட் கடந்த அக்டோபரில் விண்ணில் செலுத்தப்பட்டது. 435 மைல் சென்ற இந்த ராக்கெட் அதன் சுற்றுவட்டப்பாதைக்கு செல்லாமல் தோல்வியடைந்தது. ராக்கெட்டின் மூன்றாவது நிலை இன்ஜின் திட்டமிட்ட நேரத்தை காட்டிலும் முன்கூட்டியே எரிந்து விட்டதால் இந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக நேற்று நூரி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி தென்கொரியா சோதனை நடத்தியது. இது வெற்றி பெற்றதால் உலகிலேயே உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விண்ணிற்கு செயற்கைக்கோளை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் 10வது இடத்தை தென்கொரியா பெற்றுள்ளது.