New year offer 2017

இலங்கை செய்திகள்

நாட்டில் 5.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் முதல் டோஸ்

07/21/2021

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட 5.8 மில்லியனுக்கும் அதிகமான (5,876,282) நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 1.6 மில்லியன் (1,697,689) நபர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய தொற்றி நோயியல் பிரிவு வெளியிட்ட தகவல்களில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 14.8 சதவீதம் பேருக்கு திங்கட்கிழமை (19) இரவு நிலவரப்படி தடுப்பூசியின் இரு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 51.1 சதவீதம் பேர் இதுவரை தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.

தற்சமயம் நாட்டில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,573,967 ஆக உள்ளது.