New year offer 2017

இலங்கை செய்திகள்

யாழில் சம்பவம் - காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 4மாத குழந்தை பலி

07/21/2021

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

முழங்காவில் - குமுழமுனை கிராமத்தை சேர்ந்த ரஞ்சீவன் தனுசியன் என்ற 4 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி குழந்தைக்கு அதிகரித்த காய்ச்சலால் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர் நேற்றுமுன்தினம் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.