New year offer 2017

இலங்கை செய்திகள்

வாசுதேவ நாணயக்கார - ஆளுங் கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு காண்போம்

07/21/2021

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அரசாங்கம் பலம் பெற்றுள்ளது. 

கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு  விரைவில் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்.  

கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஒவ்வொரு வாரமும் இடம்பெற  வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என  நீர்வழங்கல் துறை அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.