New year offer 2017

இலங்கை செய்திகள்

சாகர காரியவசம் - அரசாங்கம் பலவீனமடையக் கூடாது என்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம்

07/22/2021

அரசாங்கம் பலவீனமடைய கூடாது என்பதற்காகவே வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம்.

எரிபொருள் விலையேற்றம் குறித்து உதய கம்மன்பிலவிற்கு எதிராக கட்சி என்ற ரீதியில் முன்வைத்த குற்றச்சாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சித்தார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.

அரசாங்கம் பலவீனமடைய கூடாது என்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம், என்றார்.