New year offer 2017

இலங்கை செய்திகள்

டலஸ் அழகப்பெரும - வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமையை தோல்வி எனக்கருத முடியாது

10/12/2021

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமையை தோல்வியெனக் கருத முடியாது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை பக்குவமானதே தவிர இயலாமை அல்ல.

எனவே இதனை அரசாங்கத்தின் இறுதி காலத்திற்கான அறிகுறியாகக் கருத முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து தொடர்பில் கேட்கப்பட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.