New year offer 2017

இலங்கை செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ : ஆசிரியர் - அதிபர் சம்பளத்தை இரு கட்டமாக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம்

10/13/2021

சம்பள பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தீர்வாக இரு கட்டமாக சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்பட கூடாது.என்பதை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக் கொடுப்போம். அமைச்சரவை உபகுழு அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக செயற்படுத்தப்படும். எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் 93 நாட்களாக தொடர்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் பிரதமர் தொழிற்சங்க பிரநிதிகளிடம் தீர்வு யோசனையை முன்வைத்தார்.

அதற்கமைய ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் யோசனைக்கு அமைய மூன்று கட்டமாக சம்பளத்தை அதிகரிக்க உத்தேச சம்பளத்தை  முதற் கட்டமாக 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாகவும்,மிகுதி இரு பகுதியையும் 2023ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக அதே வருடத்தில் வழங்கவும் பிரதமர் யோசனை முன்வைத்தார்.

ஆசிரியர்-அதிபர் ஆகியோரின் பிரச்சினைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.அத்துடன் சம்பள பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்.என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

கோவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் திறைச்சேரியில் இருந்து நிதி கிடைப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு கட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது கடினம்.மாணவர்களின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்பட கூடாது என்பதை கருத்திற் கொண்டு இந்த தீர்வு யோசனையை முன்வைத்துள்ளேன்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி அமைச்சரவையின் தீர்மானத்திற்கமைய அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை தொடர்ந்து செயற்படுத்தப்படும்.என பிரதமர் தொழிற்சங்கத்தினரிடம் குறிப்பிட்டார்.

அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் பிரகாரம் ஆசிரியர்,ஆசிரியர் ஆலோசகர்,மற்றும் அதிபர் ஆகிய பதவிகளை கட்டாயமாக்கப்பட்ட சேவையாக்கும் தீர்மானம் எதிர்வரும் மாதம் அறிவிக்கப்படவுள்ளது.அத்துடன் மேலும் 6 பரிந்துரைக்களையும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.