இலங்கை செய்திகள்
ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
11/25/2021தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு, களுத்துறை, கண்டி, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 07 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலையினால் கடந்த ஒக்டோபர் மாதம் 29 முதல் இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 153,895 குடும்பங்களைச் சேர்ந்த 42,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.