New year offer 2017

இலங்கை செய்திகள்

அனைத்துலக அரங்கில் தரமிறக்கப்பட்ட இலங்கை!

01/13/2022

ஜனவரி 18ஆம் திகதி காலாவதியாகும் சர்வதேச இறையாண்மைப் பத்திரத்தைத் தீர்ப்பதற்கான தயாரிப்புகளுக்கு மத்தியில் Standard & Poor´s இன் மதிப்பீடு பொருத்தமற்றது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Standard & Poor´s (S&P) இலங்கையின் நீண்ட கால இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை ´CCC +´ இலிருந்து ´CCC´ ஆகக் குறைத்துள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது குறித்து, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் குறித்த மதிப்பீடு பொருத்தமற்றது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.