New year offer 2017

இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்களின் படகை மோதிய இலங்கை கடற்படை படகு!

01/20/2022

தமிழகம் - ராமேஸ்வரம் மீனவர்களின் படகு ஒன்றின் மீது இலங்கை கடற்படையின் படகு ஒன்று மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை கச்சதீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தமிழக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்போது மீனவர்களின் விசைப்படகில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கடலில் குதித்தனர்.

எனினும் குறித்த 5 மீனவர்களையும் பிரதேசத்தில் மீன்படித்துக்கொண்டிருந்த சக ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டனர்.

பின்னர் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த செய்தி தொடர்பில் எமது செய்திச்சேவை, கடற்படையின் பேச்சாளரிடம் வினவியபோது, கச்சதீவில் இன்று காலை சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டார்.