இலங்கை செய்திகள்
வவுனியாவில் கடும் பனி மூட்டம்
03/10/2022வவுனியாவில் இன்று காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்துள்ளனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், பாடசாலை மாணவர்கள், வாகன சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஏ9 வீதி, மன்னார் வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்ச்சியபடி போக்குவரத்து செய்துள்ளன.
அதிக குளிருடன் பனி மூட்டம் ஏற்படும் காலநிலை நுவரெலியாவில் நிலவும் நிலையில் தற்போது வவுனியாவிலும் உணரப்பட்டுள்ளது.