New year offer 2017

இலங்கை செய்திகள்

திவால் நிலையை அடைந்தது இலங்கை! பகிரங்கப்படுத்திய அரசியல் முக்கியஸ்தர்

03/10/2022

தற்போது இலங்கை வங்குரோத்து(திவால்) நிலையை அடைந்துவிட்டது என்பதே உண்மை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்று சொல்வதற்கு வாய் கூசுகிறது. தற்போது இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்பதே உண்மை.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, எரிவாயு இல்லை. டொலர் இல்லை. வெளிநாட்டு ஒதுக்கத்தை விட, வெளிநாட்டுக் கடன்கள் அதிகமாக இருக்கின்றன.

இந்த நிலைமையை வங்குரோத்து என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது. இந்த பிரச்சினை தொடர்பாக நிதி அமைச்சர் நாடாளுமன்றில் விளக்கமளிக்க வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாங்களும் இலங்கையர்களே.

இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. நாடாளுமன்றில் கதைத்து இதற்கு அனைவரும் இணைந்து விரைவாக ஒரு தீர்வை காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.