இலங்கை செய்திகள்
எரிபொருள் தட்டுப்பாடு: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு
05/16/2022எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போதியளவு எரிபொருள் இன்று கிடைக்குமாயின் நாளை முதல் பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை முதல் அனைத்து புகையிரதங்களும் வழமையான நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபடும் என புகையிரத திணைக்கள அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.