இலங்கை செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள்: சஜித்
05/17/2022தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்றைய தினம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும்,
ராஜபக்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும்.
எவ்வாறாயினும், ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் ஆதரிப்போம்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை இதுவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.