இலங்கை செய்திகள்
திவால் நிலையில் இலங்கை! கோட்டாபயவுக்கு சர்வதேசத்திலிருந்து வந்த செய்தி
05/20/2022திவால் நிலையிலிருந்து இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
எனினும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரை அந்த நிதியுதவிகளை வழங்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திவால் நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு தீர்வாக அப்போதைய நிதியமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் டொலர் நிதி உதவி கோரியிருந்தார்.