இலங்கை செய்திகள்
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு
06/23/2022எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர புதிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, பெட்ரோல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய ஒரு நாள் தாமதமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
40,000 மெட்றிக் டன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் இன்று காலை நாட்டிற்கு வரவிருந்த நிலையில், குறித்த கப்பல் தாதமடையும் என தெரிவித்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்
அதன்படி இன்றும் நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பெட்ரோல் விநியோகிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆட்டோ டீசல் முழு கொள்ளளவிற்கு விநியோகிக்கப்படும் என்றும் சுப்பர் டீசல் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தில் இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.