New year offer 2017

இலங்கை செய்திகள்

தமிழக அரசின் இரண்டாவது நிவாரண உதவி தொகை அரசாங்கத்திடம் கையளிப்பு

06/24/2022

தமிழக அரசு இலங்கைக்கு வழங்கியுள்ள நிவாரண உதவி பொருட்களில் இரண்டாவது உதவி பொருட்களை இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

இந்த நிவாரண உதவி பொருட்களின் பொறுமதி மூன்று பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் மெற்றி தொன் நிவாரணப் பொருட்கள்

14 ஆயிரத்து 712 மெற்றி தொன் அரிசி, 250 மெற்றி தொன் பால் மா, 38 மெற்றி தொன் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இதில் அடங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் இரண்டாவது நிவாரண உதவி தொகை அரசாங்கத்திடம் கையளிப்பு

 

இந்த பொருட்கள் தமிழகத்தின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசின் அனுசரணையில் ஏற்கனவே ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவை வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

தமிழக அரசின் இரண்டாவது நிவாரண உதவி தொகை அரசாங்கத்திடம் கையளிப்பு