இலங்கை செய்திகள்
லவர்ஸ் லீப் நீர்வீழ்ச்சியை பார்வையிட வருபவர்களுக்கு எச்சரிக்கை
12/28/2022நுவரெலியா, ஹவாஎலியா பகுதியில் அமைந்துள்ள லவர்ஸ் லீப் நீர்வீழ்ச்சியை பார்வையிட வருபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் பார்வையிடுவதற்காக அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மிகவும் அழகாக இருந்தாலும், நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதி மிகவும் ஆபத்தானது என குறிப்பிடப்படுகின்றது.
இந்த நீர்வீழ்ச்சியை கீழ் பகுதி மற்றும் மேல் பகுதி மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
நீர்வீழ்ச்சியை தொடங்கும் பகுதியான மேல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொள்கின்றனர்.