இலங்கை செய்திகள்
இலங்கையில் மக்கள் மிகுந்த வேதனையை அனுபவிப்பார்கள்! மத்திய வங்கி ஆளுநர்
12/29/2022மிகவும் வேதனையான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மோசமாகச் சரிந்துள்ள பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு வேதனையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
பொருளாதார மந்த நிலையின் போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது பொதுமக்கள் மிகுந்த வேதனையை அனுபவிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.